Thursday, June 25, 2009
Monday, June 22, 2009
Thursday, June 11, 2009
Tuesday, June 9, 2009
Monday, June 1, 2009
டாம் & ஜெர்ரியின் அறிமுக அட்டகாசங்கள்
கழுதையின் புதியத் தளம் கார்ட்டூன்
என் அன்பு வலைத்தள ரசிகர்களே! உங்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறேன். கழுதை வலைத்தளம் ஆரம்பிக்கப் பட்டு சில மாதங்களிலேயே ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பதாக நினைக்கிறேன். அதற்கு முழுக்க முழுக்க உங்களின் ஆதரவுதான் காரணம். அதுமட்டுமின்றி உங்களின் வசதிகளுக்காக நேரடியாக செய்திகளைத் திரட்டித் தரும் திரட்டிகளுக்கு குறிப்பாக தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட்,தமிழ்வெளி,தமிழிஷ், நெல்லைத் தமிழ்,நியூஸ் பானை,உலவு,தமிழ்10 மற்றும் தமிழர்ஸ் ஆகிய திரட்டிகளுக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இந்தக் கழுதை கார்ட்டூன் என்பது முழுக்க முழுக்க வீடியோ தளம் ஆகும். உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன்களை இங்கே நீங்கள் காணலாம். அது மட்டுமின்றி எந்த நிலையிலும் மொக்கையாக இல்லாமல் மிகச்சிறந்த காமெடிகளை மட்டுமே இதில் தருவதற்கு நினைத்திருக்கிறேன். அத்தோடு அந்தக் கார்ட்டூன் பற்றிய செய்திகளையும் அந்த வீடியோவின் கருவையும் கூடவே பதிவாகத் தரவும் என்னியிருக்கிறேன். ஏன் கார்ட்டூன் தளம் என்ற கேள்விக்கு என்னுடைய பதில், இதிலே நிச்சயமாக ஒரு திருப்தி இருக்கிறது என்பது தான். வெறும் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோக்களில் நகைச்சுவைகள் பொதிந்து கிடக்கிறது.அது மட்டுமின்றி நமக்கு என்னதான் வயசானாலும் இங்கே பார்க்கும் சில கார்ட்டூன்கள் நம்மை நமது குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச்செல்லவும் வாய்ப்பிருக்கிறது. எனவே அன்பான வாசகர்களே மற்றும் பதிவுலக நண்பர்களே! உங்களுடைய முழுமையான ஆதரவு இருந்தால் மட்டும் தான் இது நடைமுறை சாத்தியமாகும். உங்களின் மகிழ்சி எனது வெற்றி.
நன்றியுடன்..,
டாஸ்மாக் கபாலி